உடல் கோணல் இறைவன் தவறு
உள்ளம் கோணல் நம் தவறன்றோ?
உடல் கோணலை மறைக்க முடிவதில்லை
உள்ளக் கோணலோ ஒளிந்து செயல் படும்
பார்த்தால் சிலர் வெறுப்பர் உடல் கோணலை
பழகினால் அனைவர் வெறுப்பர் உள்ளக் கோணலை
நல்லவனாய் இருப்பின்
கோணல் உடலோனும் கொண்டாடப்படுவான்
அல்லவனாயின்
அழகுடலோனும் தூற்றப்படுவான் .
உடல் மட்டும் கோணலெனில்
சொல்வதில் தவறில்லை........
“கோணலாயினும் இது என்னுடையது” என்று!
உள்ளம் கோணலாயின்
உரைக்க முடியுமா அது போல்?!
வெட்கப்பட வேண்டாம் உடல் கோணலுக்கு
கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும்
உள்ளக் கோணலுக்கு!
( டிஸ்கி:ஒரு விளம்பரத்தைப் பார்க்கும்போது பிறந்த சிந்தனை!)
உடல் கோணலை கண்களால் பார்க்கமுடியும். ஆனால் அகக் கோணலை காணமுடியுமோ? அது தெரியும் வரை என் செய்ய?
ReplyDeleteநம் அகக் கோணலை நாமேதான் சரி செய்து கொள்ள வேண்டும்
Deleteநன்றி சார்
டிவி பார்த்து என்ன சாதிச்சேன்னு இனி யாரும் உங்களை ஒண்ணும் கேக்க முடியாது
ReplyDeleteசரியாச் சொன்னீங்க ராஜி
Deleteநன்றி
Delete//வெட்கப்பட வேண்டாம் உடல் கோணலுக்கு கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும்
ReplyDeleteஉள்ளக் கோணலுக்கு! //
அருமையான விஷயத்தை எளிமையாகச் சொல்லிட்டீங்கள் ஐயா. பாராட்டுக்கள் ஐயா.
நேரமிருந்தால் நான் இன்று வெளியிட்டுள்ள சிறப்புப்பதிவுக்கு வருகை தாருங்கள் ஐயா.
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
நன்றி வைகோ சார்
Deleteஅருமை! உள்ளம் கோணலானால் அசிங்கம் படத்தான் வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Delete//கோணல் உடலோனும் கொண்டாடப்படுவான்
ReplyDeleteஅல்லவனாயின்
அழகுடலோனும் தூற்றப்படுவான் .// நல்ல கருத்து
நன்றி ரூபக்
Deleteஉள்ளக்கோணல் கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை விட்டு விலகுவதே சிறப்பு... நல்ல பகிர்வு குட்டன்....
ReplyDeleteவாவ்வ்வ் அருமையான கவிதை ப்ரோ. உள்ளக் கோணல் வெளித்தெரியாது. ஆனால் என்றோ ஒருநாள் தெரிய வந்துவிடும்! சூப்பர்!!!
ReplyDeleteநன்றி மணி மணி
Deleteகுறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
ReplyDeleteவந்தாலே கோணல் என்பது ஏது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி
Deletetha.ma 5
ReplyDelete"வெட்கப்பட வேண்டாம் உடல் கோணலுக்கு
ReplyDeleteகட்டாயம் தலை குனியத்தான் வேண்டும்
உள்ளக் கோணலுக்கு" சரியாகச் சொன்னீர்கள். .
கோணல் என்றோ ஒருநாள் தெரிந்து விடும்... நல்ல கவிதை,,
ReplyDeleteநன்றி கருண்
Deleteகோணலான குர்குரே இப்படியொரு அருமையான வரிகளா. சிற்பிக்கு கல்லும் கற்பனையை தூண்டும் என்பதுபோல! வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஜோசப் சார்
ReplyDeleteகோணலுக்கு எதிர்ச்சொல்தான் நேர்மையோ..விளம்பரத்திலும் வித்தியாச சிந்தனை.
ReplyDelete