Monday, August 12, 2013

பதிவர் திருவிழாவுக்குப் போவதா?போகாமல் இருப்பதா?



ஷேக்ஸ்பியரின்ஹேம்லெட்டில் மிகப் பிரசித்தமான தனியுரைப் பகுதியில் அதிகம் பேசப் பட்ட ஆரம்ப வரி இது...................

“to be or not to be,that is the question “..

”இருப்பதா அல்லது இறப்பதா அதுதான் கேள்வி”

அது போல் சில நாட்களாக என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி........

“to go or not to go”’’’’

“போவதா  அல்லது போகாமல் இருப்பதா”

ஹேம்லெட் போலவே நானும் குழம்பிப் போயிருக்கிறேன்!

என்ன இது எனக் கேட்கிறீர்களா!

நிகழும் ஆவணித் திங்கள் 16 ஆம் நாள்   (01-09-2013) ஞாயிற்றுக்கிழமை நாழிகை 7.30க்கு மேல் (காலை 9 மணிக்கு மேல்) சென்னை வடபழனியில்,கமலா திரையரங்கை ஒட்டி இடது புறம் உள்ள”திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க” அரங்கில்  நடைபெற இருக்கும் வரலாறு காணாத பதிவர் திருவிழாவுக்கு...........

“போவதா அல்லது போகாமல் இருப்பதா? அதுதான் கேள்வி”


ஏன் இந்தக் கேள்வி? இது போன்ற ஒரு அரிய வாய்ப்புக் கிடைக்கும்போது,சக பதிவர்களை ஓரிடத்தில் சந்தித்து உரையாடி மகிழும் வாய்ப்புக் கிடைக்கும்போது பயன் படுத்திக்கொள்ள வேண்டாமா?

அவசியம் வேண்டும்.

ஆனால் என் பிரச்சினைகள் நான் திருவிழாவுக்குச் செல்வதற்குத் தடையாக இருக்கின்றன.

எனவே குழப்பம்!

இந்தக் குழப்பத்திற்கு விடை ஏதாவது பதிவரிடம் கேட்கலாம் என மிழ் மம் பக்கத்தைத் திறந்து கண்ணை மூடிக் கொண்டு ஒரு இத்தில் தொட்டேன்.பார்த்தேன் ஒரு பதிவர் பெயரை;நல்ல வேளையாக அவரது அலைபேசி எண்ணும் கிடைத்தது.

தொடர்பு கொண்டேன்.

“ஹலோ,”

“சார்.........ங்களா?

ஆமாம்.நீங்க யாரு?

நான் பதிவர் குட்டன் பேசுகிறேன்.

குட்டனா?நான் கேள்விப்பட்டதேயில்லையே?(முதல் குட்டு)

சார் நான் ஓராண்டுக்கும் மேலாக எழுதி வருகிறேன்.

ஒகோ!வலைப்பூ பெர் என்ன?

“குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும்”

சிறுவர்களுக்கான வலைப்பூவா?


இல்லை சார் இளைஞர்களுக்கான வலைப்பூ.

ஓ!பெயர் குச்சி மிட்டாய் ,குருவி ரொட்டி என்றெல்லாம் இருக்கவே சிறுவர் வலைப்பூவோ என எண்ணினேன்.

சிறுவர் வலைப்பூ இல்லை ;ஆனால் சில சமயம் கொஞ்சம் சிறு பிள்ளைத் தனமாக எழுதுவேன். ஆனால் கொஞ்சம் பிரபலம்தான்;தமிழ் மணம் இன்றைய ரேங்க் 16. முன்பு ஏழு வரை முன்னேறி யிருக்கிறேன்.

உங்கள் பதிவின் தரத்துக்கு இது ஒரு அளவுகோல் எனப் பைத்தியக்காரத்தனமாக நினைக் கிறீர்களா!ஏழு வரை முன்னேறினேன்(!)என்று சொல்கிறீர்கள்; வதவத என எழுதித்தள்ளியிருப்பீர்கள்.எழுதப்படாத ஒரு விதி சொல்கி றார்களே-மொய் வைத்து மொய் எடுப்பது-அதைத் தவறாமல் பின்பற்றியிருப்பீர்கள். அவ்வள வுதான்.உங்கள் ரேங்க் நிச்சயமாக உங்கள் பதிவின் தரத்துக்குச் சான்றல்ல!”

அப்படியென்றால் அதிகம் எழுதுவதே தவறு என்று சொல்கிறீர்களா?

அப்படியில்லை .எழுதுவது இயல்பாக வரும்போது எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்.ஆனால்தமிழ்மணம் ரேங்கைக் குறிவைத்து அதைப் பெறுவதற்காக எழுதுவது தவறு என்று சொல்கிறேன்.அவ்வாறு எழுதும்போது,தினம் ஒரு பதிவாவது எழுதியாக வேண்டும் என உங்களுக்குள் ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டு,எதை வேண்டுமானாலும் எழுதும் நிலை ஏற்பட்டு விடுகிறது.பொருளற்ற பகிர்வுகள் பிறந்து விடுகின்றன!

மிஸ்டர் குட்டன்!உங்களுடன் பேசிக் கொண்டே உங்கள் பதிவுகளையும் படித்துக் கொண்டி ருக்கிறேன்.சில பதிவுகள் நன்றாக இருக்கின்றன.சில மொக்கை..ஓட்டு,ரேங்க்இந்த மாயையில் சிக்கிக் கொள்ளாமல் எழுதுங்கள்

”சாரி!நீங்கள் எதற்குத் தொலை பேசினீர்கள்?”

பதிவர் திருவிழா வருகிறதே; ஒரு வலைப்பதிவராக அதற்குப்போக ஆசை இருக்கிறது; ஆனால்தடையாகச் சிலப் பிரச்சினைகள் இருக்கின்றன.அதுதான் உங்கள் ஆலோசனைக்காக ....................... 

“சரியான குழப்பவாதியாக இருக்கிறீர்கள்.உங்கள் விருப்பம் ,சௌகரியம் இவற்றை அனுசரித்து நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.முழுநாள் கலந்து கொள்ள முடியாவிட்டால் சிறிது நேரம் சென்று பதிவர்கள் பலரைச் சந்தித்து வரலாம்.விழா பற்றியதகவல்களுக்கு   ”தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்”என்ற தளத்தை பாருங்கள்!வாழ்த்துகள்”

இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

இன்னும் முதல் கட்டத்திலேயே நிற்கிறேன் .......

போவதா அல்லது போகாமல் இருப்பதா?..........

அதுதான் கேள்வி?! 

டிஸ்கி:சகோதரப் பதிவர்களே (சக +உதரம் என்று சொல்லும்போது இரு பாலாரும் அடக்கம்).
கட்டாயமாகப் பெருந்திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்புறச் செய்யுங்கள். ஏற்பாடுகள் சிறப்பாக முனைப்புடன் நடந்து வருவதாக அறிகிறேன்.இன்று தேதி 12..இன்னும் 19 நாட்களே பாக்கி,கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் விரைவில் தங்கள் வருகை பற்றி மேற்சொன்ன பதிவில் குறிப்பிடப்பட்ட  நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து விடுங்கள்.

வாழ்த்துகள்!

24 comments:

  1. நானும் குழப்பத்தில் இருக்கிறேன். இன்னும் நான் கலந்துகொள்வது பற்றி முடிவு செய்யாத காரணம் அன்றைக்கு நான் ஊருக்கு போகவேண்டியிருந்தாலும் இருக்கும். பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதுபற்றி தெரிவிக்கவேண்டிய கடைசி நாள் எது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாரத்திற்கு முன் தங்கள் முடிவை சொல்லுங்கள் சார்... ஒன்னும் பிரச்சனை இல்லை...

      Delete
    2. தகவலுக்கு நன்றி திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களே!

      Delete
    3. கலந்துகொள்ள முஅற்சி செய்யுங்கள் சார்
      நன்றி

      Delete
  2. வணக்கம் திரு குட்டன் அவர்களே, கட்டாயம் வர முயற்சி செய்யுங்கள்.... இதுவரை தங்களது முகம் கண்டிராத எங்களுக்கு காண ஆவல்....

    அவசியம் வரவும்.

    ReplyDelete
    Replies
    1. தடைளைத் தகர்த்து தட்டாமல் வர முயக்வேன்!
      நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  3. இறுதியில் சொன்னது போல முழு நாள் இருக்க முடியா விட்டாலும் எட்டிப் பார்த்துவிட்டு செல்லலாம்.
    முயறசி செய்க!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக!
      நன்றி முரளிதரன்

      Delete
  4. குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பதிவு குட்டன்...

    ஹா.. ஹா...

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.....

    நானும் இன்று பதிவர் சந்திப்பு பற்றி தான் எழுதியிருக்கிறேன்.... :)

    ReplyDelete
    Replies
    1. படித்து விட்டேன்.வரவேற்கிறேன்
      நன்றி

      Delete
  6. இந்தியாவுக்குள் இருந்தால் ச்சும்மா ஒரு எட்டுப் போய்விட்டு வாங்கோ சகா.. !

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் செய்யப் போகிறேன்
      நன்றி நிரஞ்சன் தம்பி

      Delete
  7. குழப்பினாலும் குறை சொல்லாமல் எல்லோரையும் அழைத்தமை நன்று

    ReplyDelete
    Replies
    1. விழா சிறப்பாக நடைபெற என்னால் வாழ்த்த மட்டுமே முடியும் கவிஞரே!
      நன்றி

      Delete
  8. குட்டன் அவர்களின் மிகத் தவிர மிக மிக தீவிர வாசகன் நான்... அவரை பதிவர் சந்திப்பு அன்று எதிர்பார்ப்பதில் மிக தீவிரமாய் மிக மிக தீவிரமாய் ஆசைப் படுகிறேன்...

    குட்டன் அவர்களே உங்கள் வாசக விருபத்தை நிறைவேற்றுவீர்களா :-)))))))))))))

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு நான் அடிமை!உங்கள் தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை!
      நன்றி சீனு

      Delete
    2. குட்டன் சார், நானும் உங்கள் தீவிர ரசிகன்... இம்முறை உங்களைக் காண ஆசையுடன் காத்திருக்கிறேன். ஏமாற்றாதீர்கள்

      Delete
  9. நானும் போகணும்கோ ஆசையா கீது பா

    ReplyDelete
    Replies
    1. எங்கப்பாகீறே!வர்ணும்னு நெனச்சா பால் மாறாம வந்துடு வாத்யாரே!

      Delete
  10. சாதாரண பதிவர் நானே போறேன். . . . . நீங்களாம் கண்டிப்பா வாரனும் பாஸ். . .

    ReplyDelete
    Replies
    1. சாதாரண ,ஸ்பெசல் என்றெல்லாம் சொல்ல இது என்ன தோசையா?எல்லோரும் பதிவர் அவ்வளவே!

      சந்திக்க முயல்கிறேன்!
      நன்றி ராஜா

      Delete