நிலா என்றவுடன் ஒரு கவிஞன் அதை ஒரு
பெண்ணின் முகத்துக்கு ஒப்பிடுவான்
“கூன் பிறை நெற்றியென்றால் குறை
முகம் இருண்டு போகும்”
“நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக்
குறு முறுவல் பதித்த முகம்”
என்றெல்லாம் பாடுவார்கள்.
ஆனால் சில காலத்துக்கு முன் நடந்தது
இது.
ஒரு முழு நிலா இரவு.
தொலைபேசி அழைத்தது.
எடுத்தேன்
நண்பர் ஒருவர் பேசினார்.குரலில்
ஒரு பர பரப்பு.”நிலாவைப்
பாருங்கள்;சாய்பாபா தெரிகிறார்.”
வெளியே சென்றேன்.பார்த்தேன்.
ஆம் சத்திய சாய் பாபாவின் முகம்
தெரிந்தது.
நிலவின் கருப்பான பகுதி அவர் முடி
போலவும் மீதிப் பகுதி அவர் முகம் போலவும் தெரிந்தது.
என் பங்குக்கு நான் ஒரு நண்பருக்கு
ஃபோன் செய்து சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து அவர்
தொலைபேசினார்.
“ஆமாம்.பார்த்தேன்.கால் மேல் கால்
போட்டு சாயி அமர்ந்திருக்கிறார்”
நான் வியந்தேன்.
நான் சொன்னது சத்திய சாயி.
அவர் பார்த்த்து ஷீர்டி சாயி.
புரிந்து கொண்டேன்
எதை நினைத்துக் கொண்டு
பார்க்கிறீர்கள்,அது அங்கே தெரிவதை.
இத்தனை நாட்கள் வடை சுடும் கிழவி கூடத்
தெரிந்தாளல்லவா?!
எல்லாம் மனம் செய்யும் மாயம் அன்றி
வேறில்லை!
பதிவுலகில் ஹன்சிகாவுக்காக இருவர்
சண்டை போட்டுக் கொள்வார்கள்.
அவர்கள் பார்த்தால் நிலவில் ஹன்சிகா
கூடத் தெரியலாம்!
இன்று இதை எழுதக் காரணம்,இன்று நீல
நிலா.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையே
நிகழ்வது.
ஒரே மாதத்தில் இரு முழு நிலவுகள்
வந்தால்,இரண்டாவது நீலநிலா எனப் படுகிறது.
19 ஆண்டுகளுக்கு ஒரு முறை,ஒரே
ஆண்டில் இரண்டு மாதங்களில் இரு முழு நிலவுகள் வருமாம்!இரு நீலநிலா!
எனவே இன்றைய வாய்ப்பைத் தவிர
விடாமல் உங்கள் மனங்கவர்ந்தவரின் முகத்தை நிலவில் கண்டு களியுங்கள்!
டிஸ்கி:எனக்கு மிகவும் பிடித்த
நிலாப்பாட்டு”நிலவே என்னிடம் நெருங்காதே”பாடியவர் பி.பி.எஸ்.