எழுதாத பதிவொன்று பிறந்தது இன்று
வழுவாத நெஞ்சொன்று வழுவிற் றின்று
நழுவாத துகிலும் கூட நழுவிற் றின்று
தழுவாத தேகச் சூடும் குளிர்ந்த தின்று.
வெட்டியது மின்னல்,வெடித்தது இடி
கொட்டியது மழை,குளிர்ந்தது பூமி
கட்டிய கரையும் உடைந்து போனதே
கட்டுப்பாடின்றி பெருகிற்று வெள்ளம்
பிறந்தது புதிதாக உறவு ஒன்று
பறந்தது முன் வந்த துன்பம் எல்லாம்
மறந்தது பழைய பகை,சண்டை எல்லாம்
சிறந்ததே நடந்தது வேறென்ன சொல்ல?!