ஒரு பெண் ஆற்றின் கரையில் துணிகளைக் மரக்கட்டையால் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கட்டை கைதவறி ஆற்றில் விழுந்து
விட்டது.
அவள்”ஐயோ! கட்டை போய் விட்டதே ? இனி
எப்படித் துவைப்பேன்?”என அழத் தொடங்கினாள் .
கடவுள் அவள் முன் தோன்றி விஷயம் என்ன
என்று கேட்க அவள் நடந்ததைச் சொன்னாள்.
கடவுள் தன் கையை ஆற்றில் விட்டு ஒரு தங்கக்
கட்டையை எடுத்து அவளிடம் காட்டி “இதுவா” எனக் கேட்டார்.
அவள் இல்லை என்றாள்.
மீண்டும் ஆற்றில் கைவிட்டு ஒரு வெள்ளிக்
கட்டையை எடுத்துக் காட்டினார்.
அவள் இல்லையென்றாள்.
மூன்றாவது முறையாக அவளது மரக்கட்டையை எடுத்துக்க்காட்ட அவள் ஆம் என்றாள்.
கடவுள் அவள் நேர்மைக்குப் பரிசாக
மூன்றையும் அவளுக்கே கொடுத்து மறைந்தார்.
சிறிது காலத்துக்குப் பின் அவள் ஆற்றின் கரையோரம் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தபோது
அவள் கணவன் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி விட்டான்!
அவள் அழுதாள்.
கடவுள் மீண்டும் தோன்றி நடந்ததைக்
கேட்டு ஆற்றில் கைவிட்டு தல’ அஜித்’ தை எடுத்துக் காட்டினார்.
அவள் ”ஆம்.அவர்தான் ” எனச் சொல்ல கடவுளுக்குக் கோபம் வந்து கேட்டார்
“ஏன் பொய் சொல்கிறாய்?”
அவள் சொன்னாள்”நான் இல்லையென்று சொன்னால்
அடுத்து தளபதி ’விஜய்’யை எடுத்துக் காட்டு வீர்கள். அவரும் இல்லையென்று சொன்ன பின் என் கணவனைக் காட்டுவீர்கள்.
கடைசியில் மூவரையுமே எனக்குக் கொடுத்து விட்டுச் சென்று விடுவீர்கள்.மூவரையும் சமாளிக்க
என்னால் இயலாது .எனவேதான்………!”
கடவுள் சிரித்து அவள் கணவனைத் தந்து மறைந்தார்!!
(இணையத்தில் கிடைத்தது--சில மாற்றங்களுடன்!)
ஹா ஹா ஹா... என்ன குட்டன் சிறிது காலம் தலைமறைவாகி விட்டீரே... தலைவா படத்தில் நடிக்க சென்று விட்டீரா
ReplyDeleteதலை மறைவா?!அதெல்லாம் அவதார ரகசியம்!சொல்லக்கூடாது!
Deleteநன்றி சகா
அடடா! இந்த கதையை இப்படி சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா?! பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஎப்படி வேணா சொல்லலாம்!
Deleteநன்றி நட்பே!
ஹா... ஹா... 'நல்ல' சிந்தனை...!
ReplyDelete:) நன்றி தனபாலன்
Deleteஹா ஹா . இந்த கதையை இப்படியும் சொல்லலாமா.
ReplyDeleteலாம்!
Deleteநன்றி ரூபக் ராம்
ஹா ஹா ஹா இந்தக் கதையின் ஒரு பாதி எனக்கு ஆல்ரெடி தெரியும்! அதென்ன இன்னும் கொஞ்சம் எக்ஸ்ராவா? சூப்பருங்க! ஆமா எங்க குட்டன் கொஞ்ச நாளா ப்ளாகுல உங்கள காணோம்??
ReplyDeleteவேறு வேலை?!
Deleteநன்றி (எந்தப் பெயரில் அழைப்பது?!)
சூப்பர் ...
ReplyDeleteநன்றி அண்ணே!
Deleteஎனக்கு எதுக்கு அதெல்லாம்!
ReplyDeleteநன்றி
ஒரே கதையை சினிமாவில் மாற்றி மாற்றி எடுப்பதுபோல் இந்த நல்ல கதையையும் மாற்றிவிட்டார்களே! காலத்தின் கோலமோ?
ReplyDeleteதலபதி...:)
ReplyDeleteசூப்பர் ரீமேக்! ரசித்தேன்! நன்றி!
ReplyDeleteஇப்படி குட்டிக்கதை சொல்லியே ப்ளாக் நடத்துறீங்களே... கதை சொல்லிய விதம் அருமை....
ReplyDelete