ராமுவும் சோமுவும் நீண்ட கால நண்பர்கள்.
இருவருக்கும் வயது 90.
ராமுவுக்கு உடல் நலம் குன்றி படுக்கையில் இருந்தார்.
அவருக்குக் கெடு வைத்து விட்டார்கள் மருத்துவர்கள்.
அவரைப் பார்க்க வந்த சோமு, ராமுவிடம் சொன்னார்”ராமு!நாம் இருவரும் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்தோம்!இளமையில் ஒவ்வொரு ஞாயிறன்றும் கிரிக்கெட் விளையாடினோம்,பின்னர் எந்த ஆட்டத்தையும் பார்க்காமல் தவற விட்டதில்லை.நீ விண்ணுலகம் சென்ற பின் அங்கு கிரிக்கெட் இருக்கிறதா என்று எனக்குச் சொல்”
ராமு சொன்னார்”எனது உயிர் நண்பனுக்கு இது கூடச் செய்ய மாட்டேனா?”
மறுநாள் ராமு இறந்து விட்டார்.
ஓரிரு நாட்களுக்குப் பின் சோமு உறங்கிக் கொண்டிருந்த போது யாரோ சோமு,சோமு என அழைக்கும் குரல் கேட்டு கண்விழித்தார்.
அறை ஒளி வெள்ளமாக இருந்தது..
மீண்டும் குரல் கேட்டது....சோமு
அது ராமுவின் குரல்!
சோமு கேட்டார்”யார்?”
"நான்தான் ராமு,விண்ணுலகிலிருந்து... சோமு உனக்கு மகிழ்ச்சியான செய்தி வருத்தமான செய்தி இரண்டும் சொல்லப்போகிறேன்”
”ராமுவா?சொல்லு சொல்லு”
”முதலில் மகிழ்ச்சியான செய்தி!நீ கேட்டபடி இங்கு கிரிக்கெட் இருக்கிறது.ஞாயிறன்று கட்டாயம் ஆட்டம் உண்டு.வயதானவர்களே இங்கு கிடையாது,எல்லோரும் இளமையாகி விட்டோம்.எவ்வளவு நேரம் ஆடினாலும் களைப்படைவதே இல்லை”
“அப்படியா?மிக மகிழ்ச்சி.கெட்ட செய்தி?”
”வரும் ஞாயிறன்று நடக்க இருக்கும் போட்டியில் ஒரு அணிக்கு நீதான் தலைவன்!”
....................................................................
சோமு கேட்காமல் விட்டு விட்டார்..அங்கும் கட்டுப்பாட்டு வாரியம் உண்டா..தலைவர் உண்டா...விண்ணுலக பிரீமியர் லீக் எல்லாம் உண்டா..சூதாட்டம் உண்டா..என்றெல்லாம்!
இருக்கும் ...இங்கிருந்துதானே அங்கு போகிறார்கள்!
ஆக சொர்க்கத்தில் கூட கிரிக்கெட் தானா? தேசிய விளயாட்டு என ‘சொல்லப்படும்’ ஹாக்கிக்கு இடம் இல்லயா?
ReplyDeleteஎன்ன செய்வது?
Deleteநன்றி சார்
அங்கும் ஊழல் நடக்கும்! ஐயமில்லை!
ReplyDeleteசந்தேகம் உண்டா என்ன?
Deleteநன்றி ஐயா
Deleteஹா...ஹா.. அருமை ரசித்தேன்.
ReplyDeleteநன்றி மாதேவி
Delete..
ReplyDeleteஎப்படியெல்லாம் சுவாரஸ்யமாக
யோசிக்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்
Deletetha/ma 3
ReplyDeleteநன்றி
Deleteகதையாக சொல்லி, இந்த சமூகத்தை கேட்கும் கேள்வி...சபாஷ்...
ReplyDeleteநன்றி ரூபக் ராம்
Deleteஅடடா அங்கேயும் சூதாட்டம் ஆரம்பிச்சிட்டானுகளா...!
ReplyDeleteநன்றி நாஞ்சிலாரே
Deleteathu sari...
ReplyDeleteஜகி வாசுதேவ் அவர்கள் சங்கரன் பிள்ளை கதையாக இதைச் சொல்லி நான் படித்திருக்கிறேன். ரசனையான கதை! அதன் க்ளைமேக்ஸை இன்றைய நடைமுறை கிரிக்கெட்டுடன் முடிச்சுப் போட்டது குட்டனின் ரகளையான ரசனை!
ReplyDeleteநன்றி பாலகணேஷ் சார்
Deleteஅட அங்கேயும் கிரிக்கெட்டா.... போச்சுடா!
ReplyDeleteநல்ல கற்பனை
ReplyDelete