Thursday, June 6, 2013

ஆடை இன்றிப்போன அரசன்!



அரசன் ஒருவனுக்கு வந்ததொரு ஆசை!

அணிய வேண்டும் ஒரு மெல்லிய ஆடை

அழைத்தான் நாட்டின் நெசவாளர்களை

ஆணையிட்டான் தன் ஆசையை நிறைவேற்ற

ஆடைகள் பல வந்து குவிந்தன அரண்மனையில்

அழகு பட்டில், பஞ்சில்,பருத்தியில் பலப்பல

அத்தனையும் ,மோதிரத்தில் நுழையும் அளவே!

அரசனுக்கு அவை எல்லாம் ஆசைப்படி இல்லை

அடியோடு நிராகரித்தான் அனைத்து ஆடைகளையும்

அப்போது வந்தான் அந்த நெசவாளி

அரசே பாருங்கள் ஆடை இதன் நேர்த்தியை

அத்தனை மென்மை கண்ணுக்கே தெரியாது

ஆடை தெரிவதற்கு கலைக்கண் வேண்டும்

அறிவு வேண்டும் அரும் பெரும் மாட்சி வேண்டும்.

அரசனும் பார்த்தான்;ஏதும் தெரியவில்லை

ஆனாலும் சொல்லப் பயம் அறிவில்லை என்றாமோ?

ஆடையை அரசனுக்கு அணிவித்தான் நெசவாளி

அரசனும் புறப்பட்டான்  ஊர்வலம் நாட்டோர் காண

அத்தனை பேரும் அச்சத்தில் வாய்மூடி நின்றிருக்க

அலறி எழுந்தது ஒரு குரல் அனைவரும் கேட்க

“அய்யய்யோ அரசர் அம்மணமாய்ப் போகிறார்!”

அச்சம் அறியாத சிறுவனவன்!

அடடா!அச்சிறுவன் எங்கே போனான் ?


ஆயிரமாய்,லட்சமாய்க் கோடி கோடியாய் வா!




8 comments:

  1. தாங்கள் சிறுவன் மூலம் சமுதாயத்தை கேள்வி கேட்கும் உவமை அருமை

    ReplyDelete
  2. ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு டிக்கட் வசூல் பண்ணுங்க....

    ReplyDelete
  3. அந்த சின்னப் பையன் ரொம்ப சுட்டியா இருக்கானே - என்னைப் போலவே :)

    ReplyDelete
  4. //“அய்யய்யோ அரசர் அம்மணமாய்ப் போகிறார்!”

    அச்சம் அறியாத சிறுவனவன்!//

    இன்றைக்கு தமிழ்நாட்டில் நாம் பார்ப்பதை,கேட்பதை சொல்ல முடியுமா? அப்படி சொன்னால்?????

    ReplyDelete
  5. இதனால் தாங்கள் சொல்ல வரும் நீதி....,

    ReplyDelete