Saturday, May 25, 2013

சீனிவாசன்,பதவி,சட்டம்!




சீனிவாசனை எண்ணி நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.

நாம் அனைவரும் வியந்து போற்றக்குடிய சாதனை அவருடையது.

23-02-1967 இல் சண்டிகர் இந்தியாவில் பிறந்தவர் இவர்.

பிறந்த இடம் சண்டிகர் ஆனாலும் இவர் ஒரு தமிழர்.

இவரது தந்தையின் பூர்விகக் கிராமம்,திருநெல்வேலி அருகில் உள்ள  திரு வேங்கடநாதபுரம் என்பதாகும்.

1960 இலேயே இவரது குடும்பம் அமெரிக்காவின் கன்சாஸில் உள்ள லாரென்ஸ் என்ற இடத்துக்குக் குடியேறி விட்டது.

இவரது தந்தையார் கன்சாஸ் பலகலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும்,தாயார் கன்சாஸ் நகரக் கலை நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும்,பின் சட்டப்பள்ளியில் சட்டமும், வாணிபப் பள்ளியில்,மேலாண்மைப் பட்டமும் பெற்றர்

இவர் முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் ஆகும்.

இவரை எண்ணி ஏன் பெருமைப்பட வேண்டும்?

அமெரிக்க ஆட்சி மன்றம் இவரை ஏக மனதாக  தலைநகரில் உள்ள மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்திருக்கிறது.

”ஸ்ரீநி அமெரிக்காவின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் ஒளி விளக்கு”என வெள்ளை மாளிகை அறிக்கையில் ஒபாமா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்

இது முதல் படிதான்...

எதற்கு?

அவர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற  நீதிபதியாக நியமனம் பெறுவதற்கு!

இந்த சீனிவாசனைப் பாராட்டுவோம்!

பல புதிய உயரங்களைத் தொட  வாழ்த்துவோம்!

27 comments:

  1. Replies
    1. எதற்கு இந்த ஹா,ஹா,ஹா?!
      நன்றி சீனு

      Delete
  2. இப்ப அவருகிட்ட எத்தன கோடியிருக்கு அதை சொல்லுங்க முதல்ல...

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்
      நன்றி சௌந்தர்

      Delete
  3. நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.நமக்கெல்லாம் பெருமைதான்

    ReplyDelete
  4. ஒரு இந்தியனாகவும், தமிழனாகவும் பெருமைப்படுகிறேன்.

    ReplyDelete
  5. பெருமைப் படத்தக்க செய்தி! பகிர்வுக்குநன்றி!

    ReplyDelete
  6. ஒ, இது வேற ஸ்ரிநிவாசனா?

    ReplyDelete
  7. ஆம்., பல புதிய உயரங்களைத் தொட வாழ்த்துவோம்!

    ReplyDelete
  8. எங்கிருந்தாலும் தமிழன் தமிழன்தான்...அவர் மேன்மேலும் உயர்பதவிக்கு செல்லட்டும்..

    ReplyDelete
  9. சீனிவாசன் பேர்ல எவ்ளோ பேரு..
    இந்த அமெரிக்க சீனிவாசனை பாராட்டுவோம்

    ReplyDelete
  10. சீனிவாசன்,பதவி, சட்டம் என்ற தலைப்பை பார்த்தபோதே இவர் அவராக இருக்காது என நினைத்தேன். நான் நினைத்தது சரியே. இவர் வேறு என்றாலும் ‘அவரும்’ இவரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தற்செயலாக உள்ள ஒற்றுமை!

    ReplyDelete
    Replies
    1. வேற்றுமையில் ஓர் ஒற்றுமை கண்டீர்கள்!
      நன்றி ஐயா

      Delete
  11. எப்படித்தான்யா அப்பப்ப வெவகாரமான பேருக்கு தகுத்த மாதிரி உமக்கு கிடைக்குது.........!! ம்ம்ம்ம்....... நடத்து நடத்து........

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா
      நன்ரி ஜெயதேவ்தாஸ்

      Delete
  12. பெருமைப்படக்கூடிய விடயம் தான்.அவர் மேலும் உயரங்களை தொட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  13. நாம் பெருமையுடன் சீனிவாசனைப் பாராட்டத்தான் வேண்டும்

    ReplyDelete