Wednesday, May 15, 2013

ஏஞ்சலினா ஜோலியின் மார்பகங்கள்





பெண்ணே!உனக்குத் துணிச்சல் அதிகம்தான்

பெண்மைக்கு அழகே மார்பகம்தான் என்று

ஆண்கள் எல்லாம் ஆவலுடன் நோக்கும் உலகில்

கவர்ச்சியே மூலதனமாய்க் காட்டி முன்னேற

நடிகையர் முந்தும் கனவுப் பட்டறையில்

உடலழகு காட்டியே உயர நினைக்கும் கனவுலகில்

கவலைகள் எதுவுமின்றி  களைந்தாய் உன் மார்பகத்தை

கேன்ஸர் எனும் அரக்கனின் பிடியில் தப்புதற்கே!

மங்கையர்க்கு எல்லாம் ஒரு அறிவுரை தந்து விட்டாய்

ஏஞ்சலினா ஜோலி நீ வாழ்கவென்றே  வாழ்த்துகிறேன்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

7 comments:

  1. பாராட்ட வேண்டியவிடயம் நடிகையின் முன்மாதிரியான செயலை!

    ReplyDelete
  2. Thanks for spreading the word across...

    ReplyDelete
  3. துணிச்சல் பெண்மணி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. வணக்கம் குட்டரே!
    மார்பகப் புற்றுநோய் ஆபத்தானது.இது ஒரு மார்பகத்திலிருந்து மற்றையதற்கும் vertebral venous plexus ஊடாக மூளை,முள்ளந்தண்டுப் பகுதிகளுக்கும் ஏனைய என்புகளுக்கும் பரவி மரணத்தை ஏற்படுத்த வல்லது.இத்தகைய ஆபத்திலிருத்து தப்ப மார்பகங்களை அகற்றுவது சாதாரண செயலே.அழகை விட உயிர் முக்கியம் பாஸ்.இதில் பாராட்டுக்குரிய விடயம் எதுவென்று புரியவில்லை.ஆனால் மார்பு புற்றுநோய்க்கு எதிராக பணியாற்றி வரும் மெக்ராத் பவுண்டேசன்,மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிங்க் ஆடை அணிந்து விளையாடிய தென்னாபிரிக்க கிரிக்கட் அணி என்போர் நிச்சயம் பாராட்டுக்குரியோரே

    ReplyDelete
  5. எல்லோருக்கும் அந்த துணிவு வராது என்பது நிச்சயம்.

    ReplyDelete
  6. என்ன செய்வது உடல் பாகங்களை விட உயிர் முக்கியம் அல்லவா?அதோடு போகட்டும்.பல்லாண்டு வாழட்டும்.

    ReplyDelete
  7. ஒரிஜினல் சின் அப்படின்னு ஒரு படம் இனிமே அதுல்ல பார்த்துக்க வேண்டியது தான்

    ReplyDelete