Thursday, May 30, 2013

அம்மா என்றழைக்காத உயிரில்லையே.........





 படத்துக்கான கவிதை
--------------------------------

அம்மா!

உன்னை நான் பார்த்ததில்லை.

நீ யாரோ எனக்குத் தெரியாது.

என்ன காரணத்தால் என்னை உதறிச் சென்றாய்

எனக்குத் தெரியாது.

எனக்கு நீ பெயர் சூட்டவில்லை

ஆனால் பட்டம் கொடுத்துச் சென்றாய்

அநாதையென்று!

அம்மாவின் அணைப்பில்

அம்மாவின் கைபிடித்து நடந்து

அம்மாவின் மடியில் உறங்கும்

குழந்தைகளைப் பார்ப்பேன்!

எனக்கு அந்தச் சுகம் மறுக்கப்பட்டது.

என்ன செய்ய?

உன் மடியில் நான் உறங்க

வேறென்ன செய்ய,இதைத்தவிர!

அம்மா,அம்மா,அம்மா…………







                                                                                                                                                                              








21 comments:

  1. அம்மா என்று அழைத்தாலே காற்றாய் வந்து அரவணைத்துப்போவாங்க கவலை வேண்டாம்.

    ReplyDelete
  2. படத்துக்கான விளக்கம் அம்மா இக்கவிதை

    ReplyDelete
  3. அன்னையை மனதில் நினைத்தாலே அன்பான வாழ்வு என்றும் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. அந்தக்குழந்தைக்குப் புரியுமா?
      நன்றி

      Delete
  4. கலங்க வைக்கும் படம். அதற்கான விளக்கக் கவிதை சூப்பர். கைவதை இல்லையென்றால் படத்தின் கருத்து சரியாக வெளிப்பட்டிருக்காது.

    ReplyDelete
  5. nalla vatikal.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேதா இலங்காதிலகம் அவர்களே

      Delete
  6. படத்துக்குப் பொருத்தமான அழகான உணர்வுள்ள கவிதை! நல்ல முயற்சி குட்டன். அருமையா எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலகணேஷ் அண்ணாச்சி

      Delete
  7. கவிதையும் அருமை. அதற்கு பொருத்தமான படமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நடன சபாபதி சார்

      Delete
  8. புகைப்படமே கலங்கவைக்கும் ஒரு கவிதையாக இருக்க , அதன் வீரியத்தை இன்னும் அதிகமாக்குகின்றது உங்கள் கவிதை ....!

    ReplyDelete
  9. kalakkareenga boss ..simplea irunthalum superana kavithai

    ReplyDelete