காதலில் விழுவதென்பது,அண்ணாசாலை
எல்.ஐ.சி.கட்டிடத்திருந்து குதிப்பதைப் போன்றது!
மூளை சொல்கிறது,இது ஆபத்தானது என்று.
இதயம் சொல்கிறது,உன்னால் பறக்க முடியும்
என்று!
...........................................
காதல் என்பது எல்லோரும் பேசும்
மொழி;ஆனால் அதை இதயத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!
.....................................................................
தயக்கத்தில் தொடங்கி,வருத்தத்தில்
முடிந்தாலும் இடைப்பட்ட காலம் எவ்வளவு இனிமை யானது?!
.......................................
காதல் ஒரு வலி என்று சொல்வர் பலர்
ஆனால் தனிமை ஒரு வலி
புறக்கணிப்பு ஒரு வலி
இழப்பு ஒரு வலி
ஆனால் இவ்வலிகளுக்கெல்லாம் மருந்து
காதலன்றோ?!
.........................................................
வயது என்பது காதலிலிருந்து
காப்பதில்லை;ஆனால் காதல் என்பது சிறிதாவது வயதாவ திலிருந்து காக்கத்தான் செய்கிறது!
.............................................................
காதல் என்பது எப்போதும் சிறிது
பைத்தியக்காரத்தனம் கலந்தே இருக்கிறது.ஆனால் அந்தப் பைத்தியக்காரத்தனத்திலும் ஒரு
தெளிவு கலந்திருக்கிறது !
.....................................................
கண்களால் காண முடியாத எதையோ இதயம் கண்டு விடுகிறது; உண்மைக் காதல் பிறக்கிறது!
.......................................................
ஆழ்ந்து காதலிக்கப்படுவது, சக்தியைக் கொடுக்கிறது;ஆழ்ந்து காதலிப்பது,துணிச்சலைக் கொடுக்கிறது.
........................................................
ஆதலினால் காதல் செய்வீர் ஜகத்தீரே!