வெனிஸ் அருகில் ஓரிடம்.
அங்கு ஓர் உணவு விடுதி.
இரு நண்பர்கள்,ஊருக்குப் புதியவர்கள் அங்கு உணவருந்த வருகிறார்கள்.
அவர்கள் அருந்திக்கொண்டிருக்கும்போதே ஒரு
தனி நபர் வருகிறார்.
பணியாளிடம் சொல்கிறார்”இரண்டு காபி;ஒன்று சுவரில்”
என்னவென்று புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
இருவரும்.
பணியாள் அந்த நபருக்கு ஒரு காபி கொண்டு வந்து
வைக்கிறார்.
அந்த நபர் காபியைக் குடித்து விட்டு இரண்டு
காபிக்குப் பணம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
அவர் சென்றவுடன் பணியாள் சுவரில் ஒரு சீட்டு
ஒட்டுகிறார் அதில்”ஒரு காபி” என்று எழுதியிருக்கிறது
அதைத் தொடர்ந்து இருவர் வருகின்றனர்;மூன்று காபிக்குச் சொல்கின்றனர்.முன்போலவே இரண்டு காபியைக்
குடித்து விட்டு மூன்றுக்கு பணம் கொடுத்துச் செல்கின்றனர்.மீண்டும்
பணியாள் சுவரில்”ஒரு காபி” என்ற சீட்டு ஒட்டுகிறார்.
சிறிது நேரத்துக்குப் பின் ஒருவர் உள்ளே நுழைகிறார்.அவரது தோற்றம்
அந்த உணவு விடுதிக்குப் பொருத்தமாக இல்லை.வறுமை நிலையில் உள்ளவர் எனப் பார்த்தாலே தெரிகிறது.
அவர் சுவரைப் பார்க்கிறார் .
ஒரு இருக்கையில் அமர்ந்து ”சுவரிலிருந்து
ஒரு காபி”என்று சொல்கிறார்.
பணியாள் சுவரிலிருந்து ஒரு காபி என்றை
சீட்டை நீக்குகிறார்
பின் எல்லோருக்கும் கொடுக்கும் அதே
பணிவுடன்,ஒரு கப் காபி கொண்டு வந்து கொடுக்கிறார்.
அந்த மனிதர் குடித்து விட்டு, பணம்
ஏதும் கொடுக்காமல் ,வெளியேறுகிறார்.
பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்குப் புரிகிறது
அந்த ஊரில் வசதி குறைந்தவர்களுக்காக்
மற்றவர் காட்டும் பரிவின் வெளிப்பாடு அந்தக் காபி
காபி குடித்துச் சென்ற அந்த மனிதர் போல் அநேகர் தாழ்ந்து ,குன்றி
கேட்கத் தேவையின்றி, உரிமையோடு அருந்திச் செல்ல
வழி செய்யும் அந்தச் சுவர்!
அந்த ஊர் மக்களின் பண்புக்குச் சான்றாக நிற்கிறது அந்தச் சுவர்!
(இது இணையத்தில் வெகுவாகப் பகிரப்பட்ட
ஒரு கதை/நிகழ்வு.இதன் மூலம் தெரியாது...நதி மூலம்,ரிஷி மூலம் போலத்தான்.எதுவாக
இருந்தால் என்ன?சொல்லப்பட்ட செய்தி போற்றுதற்குரியது அல்லவா?)