பத்திரிகையை எடுத்து முதல் பக்கத்தைப்
பார்த்தான் அவன்.
கொட்டை எழுத்தில் செய்தி முன்
நின்றது....
“அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்துக்கு
எதிர்ப்பு;படம் தடை செய்யப்படுமா?”
செய்தியின் சாராம்சம் இதுதான்.....
அந்தப் படத்தில் வரும் நாற்பது
திருடர்களும் இஸ்லாமியர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதைச் சில அமைப்புகள் கடுமையாக
எதிர்க்கின்றன.
இஸ்லாமியர்கள் அனைவரையும் திருடர்களாகக்
காட்டும் ஒரு விஷமத்தனமான முயற்சி இது; எனவே படம் தடை செய்யப்பட வேண்டும் என அந்த
அமைப்புகள் போராட்டம் நடத்தி உள்ளன.
இது குறித்துத் தயரிப்பாளர்
சொல்லும்போது “இது அரேபியாவில் நடக்கும் கதை எனவே அக்கதையில் உள்ளபடியே படம்
எடுத்துள்ளோம்.நாங்களாக எதுவும் செய்யவில்லை;யார் மனத்தையும் புண்படுத்தும்
நோக்கம் எங்களுக்குக் கிடையாது.” என்றார்
ஆனால் ஆர்ப்பாட்டக் குழுவினர் “கதை
அரபுக்கதையாக இருந்தாலும்,படம் இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது.எனவே
இஸ்லாமியர்களை இழிவு படுத்தும்படி எடுத்திருக்கக் கூடாது”என்று
சொல்லியிருக்கின்றனர்.
இதன் காரணமாக படம் வெளியாவது தடைப்
பட்டிருக்கிறது.
படத்தில் பெரும்பான்மை நேரம் திருடர்கள்
வருவதால் அக்காட்சிகளை நீக்க முடியாது எனவே மாற்று வழி காண வேண்டும் என்ற நிலையில்
மதசார்பற்ற நடுநிலையாளர்கள் சொல்லியிருக்கும் கருத்தாவது..”படத்தை வெட்டவோ,
குறைக்கவோ வேண்டாம் .மாறாக இன்னும் கொஞ்சம் படம் எடுத்துச் சேர்க்கலாம்.திருடர்கள்
இறந்தபின் ,கதாநாயகன் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர் போல் வேடம் அணிந்த இந்துக்கள்
என்பதைக் கண்டு பிடிக்கிறான்!”
அதற்கு இந்துக்களிடமிருந்து எதிர்ப்பு
வராதா என்று கேட்டதற்கு அவர்கள் பதில்....
“என்ன காமெடி பண்றீங்களா?!”
..........
முகத்தில் சில் என்று தண்ணீர்!
“விடிஞ்சு 3 மணி நேரம் ஆச்சு இன்னும் தூங்கறான்
பார்.எந்திருடா!” அம்மாவின் குரல்..
பேப்பர் படித்துக் கொண்டே இரவு தூங்கியவன் கண் விழித்தான்….
எல்லாம் கனவா?!!