நேற்றைய
கிரிக்கெட் பந்தயம்.
நடுவர்களில்
ஒருவர் திரு.ரவி-இந்தியர்.
அவர் எடுத்த
இரண்டு தவறான முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியவை.
பாகிஸ்தானுக்குச்
சாதகமானவை.
முதலாவது,சதம்
அடித்த ஜாம்ஷெட் 50 ஐ நெருங்கிக் கொண்டிருந்த போது,அஸ்வின் வீசிய பந்து, மட்டையின்
உள் விளிம்பில் பட்டுச் செல்ல முதல் ஸ்லிப்பில் ஷேவாக் அதைப் பிடித்தார்.
ஆனால் நடுவர்
அதை அவுட் இல்லையெனச் சொல்லி விட்டார் .
அடுத்து அஸ்வினின்
நேராக வந்த பந்தில் யூனுஸ்கான் பெருக்க முயன்று காலில் வாங்கி, சரியான
எல்.பி.டபிள்யு ஆக,அதையும் மறுத்து விட்டார்.
விளைவு
பாகிஸ்தான் வென்றது.சரியான முடிவு எடுத்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கலாம்.
சரிதான்...
அதிதி தேவோ
பவ!(விருந்தினரே கடவுள்)
(இதுவே இந்தியாவுக்குச் சாதகமாகத் தவறான முடிவு எடுத்திருந்தால் வாயை மூடிக் கிட்டு இருப்ப யில்ல?!அம்பையர்,நாள் முழுவதும் நிற்க வேண்டும்.பந்து வீசும் போது,எண்ண வேண்டும், வீசுபவரின் கால்,கோட்டைக் கடக்காது இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும், மட்டையில் படும்போது கவனிக்க வேண்டும் ,கால் மட்டை இரண்டிலும் படும்போது முதலில் எங்கு பட்டது எனப் பார்க்க வேண்டும், சரியான கேட்சா எனக் கவனிக்க வேண்டும்,இப்படி எத்தனையோ;அவரும் மனிதர்தானே.ஒரு கணநேர நிகழ்வைக் கொண்டு முடிவு எடுக்கும்போது தவறு நிகழலாம்.)
..........................................................................
ஒரு
அயல்நாட்டுத் தம்பதி தெரியாத்தனமாக சென்னை நகரப் பேருந்தில் ஏறினர், பயங்கரக்
கூட்டம் .கூட்டத்தில் நசுக்குண்டு சிறிது நேரம் சென்று இருக்கை கிடைத் தது.ஒரு கல்லூரி
மானவர்கள் சிலர் ஏறி அயல் நாட்டவரை
பார்த்த்தும்,தங்கள் ஆங்கிலத்தில் உரக்கப் பேசிக்கொண்டும்,கலாட்டா செய்து கொண்டும்
வந்தனர்.ஒரு மாணவர் அவர்கள் இருக்கையை ஒட்டிய ஜன்னலில் வெளிப்புறம் தொங்கி யவாறே
கலாட்டா செய்து வந்தார்.
போக்குவரத்துக்
காவலர் ஒருவர் வந்து நிலமையைச் சரி செய்தார்.
மிக நல்ல அபிப்பிராயம்
எற்பட்டிருக்கும்!
அதிதி தேவோ பவ!
(செய்திகள் உபயம்:டைம்ஸ் ஆஃப் இந்தியா)
(செய்திகள் உபயம்:டைம்ஸ் ஆஃப் இந்தியா)
.............................................................
இந்த வலைப்பூவை
இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் மலரச் செய்தேன்.
இரண்டு முறை
வலைச்சர அறிமுகம் கிடைத்தது.
ஒரு பதிவர் என்னை
இந்த ஆண்டின் நம்பிக்கையளிக்கும் பதிவர்களில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தமிழ்மண
ரேங்க் 28 .
இதற்கெல்லாம்
காரணம் இந்த வலைப்பதிவின் விருந்தினர்களான நீங்கள்தான்.
உங்கள்
அன்புக்கும் ஆதரவுக்கும் தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.
அதிதி தேவோ பவ!
....................................................